புதிய தேர்தல் ஆணையாளராக மஹிந்த தேஷப்பிரிய நியமனம்!...

மஹிந்த தேசப்பிரிய புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக இருந்த தயானந்த திஸாநாயக்க ஓய்வு பெற்றுச்செல்வதையடுத்து இப்புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Read More...

2011 உள்ளூராச்சி மன்றத் தேர்தல் ஓர் ஆய்வு !...

2011 - 03 - 17 ஆம் திகதி நடந்து முடிந்த 234 சபைக்கான உள்ளுராட்சி மன்ற தேர்தலில் 55 - 60 % ஆன வாக்களர்கள் கலந்துகொண்டதாகவும் , வாக்களிப்பை ரத்துச்செயும்படியிலான பாரிய சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் பெபரல் அமைப்பு தெரிவித்துள்ளது . மஹிந்த சிந்தனையை மீண்டும் மக்கள் அங்கீகரித்துள்ளதனையே நடந்து முடுந்த தேர்தலில் ஐ . ம . சு . கூட்டமைப்பின் அமோக வெற்றி எடுத்துகாட்டுகிறது . 3 மாநகர சபைகள் 30 நகர சபைகள் 201 பிரதேச சபைகள் ஆகியவற்றுக்கான மேற்படி தேர்தலில் 3036 உறுப்பினர்களை தெரிவு செய்ய 29108 வேட்பாளர்கள் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும் . கடந்த பொது தேர்தலின் போது, ஐ . ம . சு . கூட்டமைப்பு 60 . 33 % வாகுகளையும் , ஜனாதிபதி தேர்தலின் போது 57 . 88 % வாக்குகளையும் பெற்றிருந்த போதும் , இத்தேர்தலில் ஐ . ம . சு . கூட்டமைப்பு பெற்ற வாக்குகள் 55 . 11 % ஆக குறைவடைந்து இருந்ததை காணக்கூடியதாக இருந்தது. அதேநேரம் , கடந்த பொது தேர்தலின் போது 29 . 34 % வாக்குகளை பெற்று இருந்த ஐ . தே . க . இத்தேர்தலில் 33 . 62 % வாக்குகளை பெற்றுள்ளமை அக்கட்ச்சியின் வாக்கு வீத வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது . நடைபெற்ற 234 உள்ளூர் ஆட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐ . ம . சு . கூ 205 சபைகளை அமோக வெற்றியுடன் கைப்பற்றியுள்ளது . அது பெற்ற வாக்குகள் 3338401 . ஆசனங்களின் எண்ணிக்கை 1839 ஆகும். ...


Read More...

முஸ்லிம் மதகுரு ஒருவருக்கு கிறிஸ்தவ நபர்கள் அதிரடி...

கண்டி கட்டுக்களை ஜும்மா மஸ்ஜித் காரியாலயத்தில் கடமையாற்றும் புவாத் நானா என அழைக்கப்படும் முஸ்லிம் மதகுரு ஒருவர்; கட்டுக்களை ஜும்மா பள்ளி வீதியில் 2011 02 26 ம் திகதி மாலை 3 :30 மணியளவில் இனம் தெரியாத நபர்கள் இருவரால் தாக்கப்பட்டுள்ளார். தற்போது கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெரும் இவர் ஹெம்மாத்தகமையை சேர்ந்தவராவார். இது குறித்து விசாரணைக்கென இவ்வீதியில் வசிக்கும் கிறிஸ்தவரான திரு கஜமோகனும் அவரது மனைவியும் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பெந்தகொஸ்தே அமைப்பினரே குறித்த நபரை அடித்துக் காயப்படுத்தியிருக்கலாம் என பிரதேச முஸ்லிம்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மேற்படி வீதியில் வசிக்கும் கிறிஸ்தவ பெந்தகொஸ்தே அமைப்பைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியையான கஜமோகன் என்பவரது வீட்டு மதில்; கடந்த 2011 02 17 ஆம் திகதி காலை 10 மணியளவில் இனம் தெரியாத குழுவினரால் இடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருமதி கஜமோகனால் கண்டிப் போலீஸில் முஸ்லிம் பள்ளி நிர்வாகத்தினருக்கெதிராக முறைப்பாடு செய்யப்பட்டு பொலீசாரினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது. நொறுக்கப்பட்ட மதிலை மீள் நிர்மாணம் செய்ய நேற்று காலை திருமதி கஜமோகனால் அழைத்து வரப்பட்ட மேஸ்திரிகளை; போலீஸ் விசாரணையில் குறித்த மதில் இருப்பதால், விசாரணை முடியும் வரையில் மீள் நிர்மானப்பணிகளைச் செய்ய வேண்டாம் என அருகிலிருந்த...


Read More...

பிரபாகரனின் தாயார் மரணம்....

தமிழீழ விடுதலைப் புலிகளின் மறைந்த தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையார் கடந்த 2011 02 20 ம் திகதி அதிகாலை வல்வெட்டித்துறை பொது வைத்தியசாலையில் வைத்துக் காலமானார். கடந்த ஒரு வருட காலமாக கடும் சுகயீனமுற்ற நிலையிலேயே அவர் காணப்பட்டார் என்பது குறிப்பிடப்பட்டது. 2011 02 22 ம் திகதி இன்று மாலை 4 :30 மணியளவில் வல்வெட்டித்துறை ஊறணி மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது. அன்னாரது இறுதிக் கிரியையில் கலந்துகொள்ள நேற்றிரவு இலங்கை வந்த விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவனும் குழுவினரும் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவுத் துறை அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இது குறித்துக் கொதிப்படைந்த திருமாவளவனும் விடுதலைச் சிறுத்தைகளும் இன்று தமிழ்நாடு முழுவதிலும் கண்டன ஊர்வலங்கள் நடத்தப்பட்டுள்ள அதே வேளை, தமிழ் நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தை மூடும் படியும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். தம்மைத் திருப்பி அனுப்பியது குறித்து கருத்து வெளியிட்டுள்ள திருமாவளவன்; இது இலங்கை அரசியல் தலைமைக்குச் செங்கம்பளம் விரிக்கும் இந்திய அரசுக்கும், இந்தியத் தேசத்துக்கும் செய்த அவமானம் என்று தெரிவித்துள்ளார். அதே சமயம் உள்நாட்டிலும், யாழ் பல்கலை மாணவர்கள் இருதிக்கிரியைக்குச் செல்லாதவாறு போலீசார் தடுத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பல தடங்கல்களுக்கு மத்தியிலும் பெரும் திரளான மக்கள் இறுதி ஊர்வ...


Read More...

டாக்டர் சாக்கிர் நாயக் - மேதை மஹ்தி சந்திப்பு....

கடந்த ஜனவரி மாத இறுதியில் ஸ்ரீ லண்கங்கவுக்குத் திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட டாக்டர் சாக்கிர் நாயக்கை சிறு வயது மேதை மஹ்தி கொழும்பில் சந்தித்தார். இச் சந்திப்பு கடந்த 2011 . 01 29 ம் திகதி இரவு 'டைமெக்ஸ்' தையலகத்தில் இடம்பெற்றுள்ளது. இங்கு, அல்குர் ஆன், ஹராம்-ஹலால், விஞ்ஞானம், சூனியவெளி மற்றும் கோள்கள் பற்றி இருவரும் கலந்துரையாடியதாக மஹ்தியின் வட்டாரம் தெரிவிக்கிறது. சந்திப்பின் போது எடுக்கப்பட்ட படங்கள் கீழே:


Read More...

ஈரலிப்பான காலநிலை நான்கு மாதங்கள் வரை நீடிக்கும் அ...

உலக காலநிலை மாற்றங்கள் காரணமாக நாட்டில் முற்றிலும் உலர்ந்த காலநிலை ஏற்படுவதற்கு சில மாத காலம் செல்லும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை தற்போதைய நிலைமையானது குறைந்தபட்சம் இன்னும் 2-4 மாதங்கள் நீடிக்கும் அதாவது ஏப்ரல் அல்லது மே முற்பகுதி வரை நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளது. இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் எஸ்.எச். காரியவசம் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்: எதிர்வரும் நாட்களில் மழை வீழ்ச்சி குறையும் என எதிர்பார்க்கலாம். என்ற போதிலும் முற்றாக உலர்ந்த காலநிலையை எதிர்பார்க்க முடியாது எனக் கூறியுள்ளார். நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் தாழமுக்கம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என கூறியுள்ள அவர், காற்றின் காரணமாக வெப்பநிலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்துக்கு வழங்கியுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார். ...


Read More...

மு. கா.நிலைப்பாடு ?மக்கள் மூக்கில் விரல்...

எதிர்வரும் உள்ளுராட்சித்தேர்தலில் மு.கா அரசுடன் இணைந்தும் எதிர்த்தும் போட்டியிடுவது வாக்காளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.அரசில் அங்கம் வகிக்கும் மு.கா அமைச்சுகளையும் உள்வாங்கிக்கொண்டு எவ்வாறு தனது பிரச்சாரங்களை முன்னெடுக்கும் என்பதுதான் அரசியல் வட்டாரங்களில் இன்றுள்ள கேள்வி .கடந்த மாகாண சபை,பாராளுமன்ற,ஜனாதிபதித் தேர்தல்களின் போது ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்த மு.கா இம்முறை அரசுக்கு எதிராகபேச முடியாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.ஆனால் அரசுக்கு ஆதரவாகப்பேசினாலும் முஸ்லிம் மக்கள் தமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற பயமும் மு .காவுக்கு உண்டு.எவ்வாறு மு.கா காய் நகர்த்தினாலும் இம்முறை தேர்தலில் எதிர்ப்பார்க்கும் வெற்றி மு.காவுக்கு கிடைக்க மாட்டது . தலைவர் அமைச்சர் ஹகீம் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தாக்கல் செய்த அகுரனை பிரதேச சபைக்கான வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமை கட்சிக்கு ஒரு பாரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.கண்டியில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே பிரதேச சபை இது மட்டுமே.தனது வேட்புமனுவை அங்கீகரிக்குமாறு நீதிமனத்தின் முன் செல்லும் சந்தர்ப்பம் இருந்தாலும் வேட்புமனுவில் உள்ள தவறு நிவர்த்திக்க முடியுமானதா என்பது சந்தேகமானதே.அவ்வாறு நீதிமன்ற அங்கீகாரம் கிடைக்காவிடின் ஆளும் கூட்டணி யை ஆதரிக்க மு.காவின் கடமை .ஆனால் ஐ.ம.சு.கூ தலைமை வேட்பாளர் மு.காவில் இருந்து ஆளும் கட்சிக்கு தலைவ...


Read More...

உள்ளூராட்சி தேர்தல் சம்பந்தமாக UCMC வெளியிட்டுள்ள ...

2011 உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் ஆளும்தரப்பு முஸ்லிம் வேட்பாளர்களை வேற்றிஈட்டசெய்ய தமது பங்களிப்பை வழங்கப்போவதாக UCMC யின் உயர்பீடம் கூடி முடிவெடுத்துள்ளதாக UCMC வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுச்செலாளர் பஸ்லின் வாஹிட் தெரிவித்துள்ளார். உள்ளுராச்சி மன்ற தேர்தல்களில் தெரிவு செய்யப்படுவோர் சமூகத்துக்காகக் குரல் கொடுப்பவர்களாக இருந்து பயனில்லை. சமூகத்துக்காக களமிறங்கி செயற்படத் தக்கவர்களையே முஸ்லிம் சமூகம் தெரிவு செய்யல் வேண்டும் என்றும், அவ்வாறு செயற்படத் தக்கவர்களை இனம் கண்டு அவர்கள் எக்கட்சியைச் சார்ந்தவர்களாயிருப்பினும், அவர்களது வெற்றிக்கான முன்னெடுப்புகளை UCMC செய்யும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்னும் 5 வருட காலம் பதவியில் இருக்கப் போகும் ஆளும் தரப்புடன் இணைந்திருப்பதன் மூலமே சமூகத்தின் அபிவிருத்தியை இலகுவில் அடைய முடியும் என்று சுட்டிக்காட்டும் அவ்வறிக்கை; ஆட்சியை அமைப்பதற்காக நடந்த கடந்த தேர்தல்களில் முஸ்லிம்கள் மேற்கொண்ட பிழையான தீர்மானங்களை சமூகத்தின் நலன் கருதி இம்முறை மேற்கொள்ளக் கூடாது என்றும் முஸ்லிம் சமூகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. முஸ்லிம் காங்கிரசின் அரசுடனான இணைவை வரவேற்றுள்ள UCMC ; பொதுத் தேர்தலுக்கு முன் இவ்வினைவை மேற்கொள்வதன் மூலம் கெளரவத்துடன் சமூகத்துக்கான பாரிய பங்களிப்பை செய்யலாம் என்றே தாம் முஸ்லிம் காங்கிரசுக்கு அறைகூவல் விடுத்ததாகவும் அவ்வறிக்கையில...


Read More...

கண்டி மாவட்ட உள்ளூராட்சி தேர்தல் கள நிலவரங்கள்....

கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்கும் பொதுத் தேர்தல் ஒன்றுக்கும் முகம் கொடுத்த சலிப்பில் உள்ள தீவின் மக்கள் மீது, புத்தாண்டின் ஆரம்பத்திலேயே மீண்டும் ஒரு தேர்தல் திணிக்கப் பட்டுள்ளமையானது; சாதாரண மக்களின் வாழ்வியலைக் கடினமாக்கும் ஒரு செயற்பாடாக அமையப் பெறுவதால், நாட்டின் அரசியலமைப்புச் சட்ட சீர்திருத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கிறது. நேற்றுடன் முடிவடைந்த கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தலின் போது, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யட்டிநுவர பிரதேச சபைக்கான பட்டியல்; கட்சியின் பெயரை விண்ணப்பப் படிவத்தில் தவறாகக் குறித்ததன் காரணமாக தேர்தல் செயலகத்தினால் நீக்கப்பட்டுள்ளது. இதனைச் சரி செய்வது குறித்து ஆளும் தரப்பு முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், முன்னாள் யட்டினுவரைத் தேர்தல் தொகுதி அமைப்பாளரும் மத்திய மாகாண ஆளுநருமான டிக்கிரி கொப்பேகடுவ தொகுதியின் புதிய அமைப்பாளரான ஏர்ல் குணசேகரவின் ஆதரவாளர்களை பட்டியலில் உள்வாங்க அனுமதியளிக்கவில்லை என்றும் தெரிய வருகிறது. அதேவேளை, அக்குறனைப் பிரதேச சபைக்கான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பட்டியலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் சமாதான நீதவான் கையொப்பமிட்டு உறுதிப்படுத்த வேண்டிய இடத்தில், அவரது கயொப்பமில்லாது முத்திரை மாத்திரம் பொரிக்கப்பட்டிருந்ததனை ஆட்சேபித்து ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பி...


Read More...

அரசியல் அமைப்பு சீர் திருத்தமும் உள்ளூராட்சி மன்றங...

எதிர் வரும் 2011 ல் நடைபெறப் போகும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது, நடைமுறையிலுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையினின்றும் மாறுபட்டதாகவே நடைபெறவுள்ளது. இதற்காக புதிய நிர்வாக எல்லைகள் பிரிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்படும். இத்தேர்தல் சீர்திருத்தத்தில் 2 /3 பிரதிநிதிகள் தேர்தல் மூலமும் 1 /3 பிரதிநிதிகள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. புதிய நிர்வாக எல்லைகள் பிரிக்கப்படும் போது, முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப் படும் வகையிலும், முஸ்லிம்கள் செறிவான பகுதிகள் துண்டாடப்படாத வகையிலும் அமைய வேண்டியதானது முஸ்லிம்களுக்கு மிக அவசியமான ஒரு தேவையாகும். இத்தேவையின் அவசியம் கருதி, இச் சீர்திருத்தம் சம்பந்தமாக பொதுசன அபிபிராயம் கோரப்ப்படுமிடத்து சமர்ப்பிப்பதற்காக, அறிக்கைகளைத் தயார்படுத்தும் மிக முக்கிய பணியொன்று நம் சமூகத்தின்முன் எஞ்சி இருக்கிறது. இப்பாரிய பணியைச் செவ்வனே செய்யவென கண்டி முஸ்லிம் வர்த்தகர் சங்கம் ( KMTA ), ஸ்ரீ லங்கா இஸ்லாமியப் பேரவை (SLIC ), ஐக்கிய சகோதரத்துவக் கூட்டமைப்பு (UBA ) எனும் அமைப்புக்கள் முன்வந்துள்ளன. இதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள விபரக் கொத்தினைப் பூர்த்தி செய்து எதிர் வரும் 2010 .10 .05 ஆம் திகதிக்கு முன் கிடைக்கக் கூடியதாக NEW L .G .ELECTION No :163 , S .W .R .D .Bandaaranayake Mawatha , Kandy என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கும்படி ச...


Read More...

ஈதுல் பித்ர் ஈகைத் திருநாள்....

நாளை, 2010 .09 .10 வெள்ளிக் கிழமை ஈகைத் திருநாள் ஈதுல் பித்ரை முஸ்லிம்கள் கொண்டாடவுள்ளனர். சற்று நேரத்துக்கு முன் தலைப் பிறை தென்பட்டதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும், ஸ்ரீ லங்காவின் தேசிய வானொலியும் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளன.


Read More...

'தேசிய கெளரவ நாம சம்மானம்' பெற்ற முஸ்லிம்கள்....

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை, மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களால் வழங்கப்படும் 'சாதிக கெளரவ நாம சமமான உபாதி பதவி சன்னஸ் பத்ரய' எனும் கெளரவபட்டங்களை வழங்கும் வைபவம் கடந்த 2010 .09 .04 சனியன்று கொழும்பு BMICH இல் மாலை 3 .00 மணியளவில் நடைபெற்றது. இவ் வைபவத்தில் 'ரெயின்கோ' குடை மற்றும் நுளம்பு வலை உற்பத்தி நிறுவனத்தின் முகாமையாளர்களான A C L A ஜமால்டீன், A R L M நவாஸ் ஆகியோருக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டு முஸ்லிம்களுக்கு கெளரவம் சேர்க்கப்பட்டுள்ளதானது, இன ஒற்றுமைக்கும் செளஜன்யத்துக்குமான எடுத்துக்காட்டாகும். தேஷமாமக, லங்காபுத்ர, தேஷ ஷக்தி,ஸ்ரீ லங்கா வியாபார விபூஷன பட்டத்தைப் பெற்றுக்கொண்ட ரெயின்கோ முகாமையாளர் A C L A ஜமால்டீன். தேசாபிமானி லங்காபுத்ர, தேஷமமாத்தா, லங்காதிலக, ஸ்ரீ லங்கா வியாபார விபூஷன பட்டத்தைப் பெற்றுக்கொண்ட ரெயின்கோ முகாமையாளர் A R L M நவாஸ். ...


Read More...
01234567891011

Head Lines

Prev Next

UCMC யினர் போகம்பரைச் சிறையில்...?

2010 .09 .06 ஆம் திகதி திங்கள் இன்று மாலை 26 ஆம் நோன்பினைத் துறப்பதற்கான இப்தார் நிகழ்வை UCMC யின...

06 Sep 2010

Read more

மலேஷியாவில் கடத்தப்பட்ட ஸ்ரீ லங்கா பிரஜை…

மலேஷியாவில் கடத்தப்பட்ட ஸ்ரீ லங்கா பிரஜைகளில் ஒருவர் பலி!

கடந்த 2010 .08 . 28 ஆம் திகதி இரவு மலேஷியாவில் இடம்பெற்ற ஆட்கடத்தல் சம்பவம் ஒன்றில் ஸ்ரீ லங்கா...

31 Aug 2010

Read more

UCMC யினர் கண்டியில் பேரீத்தம் பழம் பங்க…

UCMC யினர் கண்டியில் பேரீத்தம் பழம் பங்கீடு.

வழமை போன்று இம்முறையும் ஐக்கிய அரபு இராச்சியம்,  ஸ்ரீ லங்கா முஸ்லிம்களுக்கு நோன்பு துறப்பதன்...

29 Aug 2010

Read more

மேதை 'மஹ்தி' பிறந்து 10 வருடங்கள் !? 10 …

மேதை 'மஹ்தி' பிறந்து 10 வருடங்கள் !? 10 YEARS OLD GENIUS 'MAHDHI ' !?

சான்றோரையும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு ஆச்சரியத்தில் ஆழ்த்தும், அசாதாரண விடயத் தெளிவா...

16 Aug 2010

Read more

இஸ்லாமாபாத்தில் பயணிகள் விமானம் விபத்துக…

  கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு பறந்து கொண்டிருந்த தனியார் விமானம் ஒன்று 152 பயண...

28 Jul 2010

Read more

மர்ஜானுக்கு தண்ணீர் வழங்கிய ஹக்கீம்.

மர்ஜானுக்கு தண்ணீர்  வழங்கிய ஹக்கீம்.

 மத்திய மாகாண சபையின் ஐ.தே.க. பட்டியல் மு.கா. உறுப்பினரும், ஐ.ம.சு.மு. ஆதரவாளருமான S .M .M ....

26 Jul 2010

Read more

ரிஸ்வி பாரூகிற்கு நியமனம் வழங்கப்பட்டதாக…

ரிஸ்வி பாரூகிற்கு நியமனம் வழங்கப்பட்டதாகக் கூறும் செய்தி பொய்யானது.-பிரதியமைச்சர் பைசர் தெரிவிப்பு.

கடந்த 12 ஆம் திகதி மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக்கிற்கு முதலமைச்சரால் வழங்கப்பட்ட நியமனம் சம்...

20 Jul 2010

Read more

ரிஸ்வி பாரூக் மத்திய மாகாண கல்வி அமைச்சி…

மத்திய மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக் மாகாணக் கல்வி அமைச்சின் கண்கானிப்பு மந்திரியாக நியமிக்க...

15 Jul 2010

Read more

நியாஸ் மெளலவி மனித நேயம் மிக்க ஒரு மதத் …

நியாஸ் மெளலவி மனித நேயம் மிக்க ஒரு மதத் தலைவர். - ஜனாதிபதி.

கொழும்பு இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரியின் ஸ்தாபகப் பணிப்பாளரும் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான ஜனாதி...

05 Jul 2010

Read more

நியாஸ் மெளலவி காலமானார்.

 நியாஸ் மெளலவி காலமானார்.   கொழும்பு 'இஹ்சானியா'...

04 Jul 2010

Read more

கல்ஹின்னை இளைஞர் முன்னணி மறுப்பு.

கல்ஹின்னை இளைஞர் முன்னணி மறுப்பு.

நேற்று முன்தினம் எமது இணையத்தில் தரவேற்றம் செய்யப்பட்ட 'அல்குர் ஆன் கூறும் கல்ஹின்னை மண்'...

26 Jun 2010

Read more

YMMA இரத்த தானம்.

YMMA இரத்த தானம்.

மடவளை YMMA கிளை 5 ஆவது தடவையாக எதிர்வரும் ஜூலை மாதம் 18 திகதி இரத்த தான முகாம் ஒன்றை நடாத்த ஏற்ப...

25 Jun 2010

Read more

மடவளை முஸ்லிம்கள் 'பொசன் விசாக' அன்னதானம…

மடவளை முஸ்லிம்கள் 'பொசன் விசாக' அன்னதானம்.

இனங்களுக்கிடையில் ஒற்றுமைக்கான உறவுப் பாலமாக, மடவளை முஸ்லிம் வர்த்தகர் சங்கம் மற்றும் மடவளை முச்ச...

25 Jun 2010

Read more

அல்குர் ஆன் கூறும் 'கல்ஹின்னை மண்'

அல்குர் ஆன் கூறும் 'கல்ஹின்னை மண்'

"கல்ஹின்னை மண் அது சாமானியமான மண் அல்ல. குர் ஆனுல கூட இந்த கல்ஹின்னையைப் பற்றி இருக்குது.&q...

24 Jun 2010

Read more

குவைத் இளவரசர் சுட்டுக் கொலை.

குவைத் இளவரசர் சுட்டுக் கொலை.

  குவைத்தின் 19 ஆவது இளவரசர் ஷேக் பன்சல் அல் சலேம் அவரது மாமா முறையான உறவினர் ...

19 Jun 2010

Read more

பிரித்தானியா சாகிர் நாயக்கிற்கு கதவடைப்ப…

பிரித்தானியா சாகிர் நாயக்கிற்கு கதவடைப்பு.

இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமியப் பேச்சாளர் டாக்டர் சாகிர் நாயக் பிரித்தானியாவுக்குள் நுழைவது தடை செ...

19 Jun 2010

Read more

ஜனாதிபதியை திருத்த முடியாத தீவிரவாதியாகக…

ஜனாதிபதியை திருத்த முடியாத தீவிரவாதியாகக் கருதும் சிங்கப்பூரை உருவாக்கிய முதல்ப் பிரதமர்.

தமிழ் வின் இணையம் வெளியிட்டுள்ள செய்தி வாசகர் பார்வைக்கு....

05 Jun 2010

Read more

இஸ்ராயீலின் சந்ததிகள் மீது அல்லாஹ் சாந்த…

இஸ்ராயீலின் சந்ததிகள் மீது அல்லாஹ் சாந்தியையும் சமாதானத்தையும் நிலவச் செய்யட்டும்!

காஸாவை நோக்கிச் சென்ற உதவி நிவாரணக் கப்பல்களின் மீது இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதலுக்கு...

02 Jun 2010

Read more

இன்று ஜெர்மனியில் வெடித்த இரண்டாம் உலகப்…

இன்று ஜெர்மனியில் வெடித்த இரண்டாம் உலகப் போர் குண்டு.

இரண்டாம் உலகப்போரின் போது ஜேர்மனியின் மீது வீசப்பட்டும் வெடிக்காத குண்டு ஒன்று இன்று வெடித்த...

02 Jun 2010

Read more

வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டமைப…

வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டமைபற்றி இமெல்டா விளக்கம்.

முல்லைத்தீவுப் பிரதேசத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டமை தொடர்பாக அரசாங்க அதிபர் இமெல்டா ...

01 Jun 2010

Read more

வாகன இறக்குமதித் தீர்வை 50% குறைப்பு

வாகன இறக்குமதித் தீர்வை 50 சதவீதத்தாலும், மின்சார உபகரணங்களின் மேலதிக வரிச்சுமை 15% சதவீதத்தினாலு...

01 Jun 2010

Read more

தனுன திலகரத்னவின் சொத்துக்களைப் பறிமுதல்…

தனுன திலகரத்னவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம்  ஏற்பாடு.

தலைமறைவாக இருந்துவரும்  ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரத்ன தொடர்ந்து நீதிமன்றத்...

01 Jun 2010

Read more

திருமலைச் சிறுபான்மையினரது நிலங்களை அபகர…

திருமலைச் சிறுபான்மையினரது நிலங்களை அபகரிக்கும் பெளத்த பிக்கு.

மூதூர் பிரதேச எல்லைக் கிராமங்களிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை பெளத்த பிக்க...

01 Jun 2010

Read more

வடக்கின் மீள்குடி முஸ்லிம்களை விரட்டியடி…

வடக்கின் மீள்குடி முஸ்லிம்களை விரட்டியடிக்கும் தமிழ் அரசாங்க அதிபர்.

சிங்களவரிடம்  இருந்து முஸ்லிம்கள் பெற்றுக்கொள்ளும்  பாதுகாப்பு, உரிமைகள், சலுகைகள் என்ப...

31 May 2010

Read more

பிரதியமைச்சர் முஸ்தபாவுக்கு நீதிமன்ற அழை…

பிரதியமைச்சர் முஸ்தபாவுக்கு நீதிமன்ற அழைப்பாணை!

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கும் படி கேட்டு விமல் வீரவங்சவ...

31 May 2010

Read more

முஸ்லிம்களின் கலாச்சாரத்தை மாசு படுத்தும…

முஸ்லிம்களின் கலாச்சாரத்தை மாசு படுத்தும் 'விடிவெள்ளி' .

2010-05-27 வியாளக்கிழமை வெளியான விடிவெள்ளி பத்திரிகையின்  கவிதை தொகுதியில் வெளியான ஒரு ...

29 May 2010

Read more

லாஹூரில் இரு பள்ளிவாயில்களுக்கு தலிபான்க…

பாகிஸ்தானின் லாகூர் நகரில் மாடல் டவுன், காரி சாகு எனும் இடங்களில் உள்ள  'அஹமதி'யாக்க...

28 May 2010

Read more

வைகாசி விசாகத்தை கொண்டாடும் வன்னிய மக்கள…

வைகாசி விசாகத்தை கொண்டாடும் வன்னிய மக்கள்.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று காலை வவுனியாவில் கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்...

27 May 2010

Read more

பெளத்த கலாச்சாரத்துக்குள் உள்வாங்கப்படும…

பெளத்த கலாச்சாரத்துக்குள் உள்வாங்கப்படும் முஸ்லிம் மாணவர்கள்.

மனித வாழ்வில் ஒழுக்க நெறிகளை போதிக்கும் வழிகளாக மதங்கள் காணப்படுகின்றன. இஸ்லாம் மார்க்கமும் அதற்க...

27 May 2010

Read more

எதிர் வரும் வெள்ளியன்று யாழ் பெரியபள்ளி …

கடந்த 20 வருடங்களின் பின்னர் யாழ்பாண பெரிய பள்ளிவாசல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்ப...

25 May 2010

Read more

பாம்பு ஸ்பெஷல்- சாதனையாளர் பரீட் நஸீர் ம…

பாம்பு ஸ்பெஷல்- சாதனையாளர் பரீட் நஸீர் மரணம்.

பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான பாம்பு ஸ்பெஷல் பரீட் நஸீர் இன்று புத்தளத்தில் காலமானார். இவருக்கு...

24 May 2010

Read more

அரேபிய முஸ்லிம் யுவதி ரீமா பாக்கிஹ் அமெர…

அரேபிய முஸ்லிம் யுவதி ரீமா பாக்கிஹ் அமெரிக்க அழகு ராணியாகத் தெரிவு.

  மிஸ். மிச்சிகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ரீமா பாக்கிஹ் ; Miss USA போட்டியின் போது இறுத...

24 May 2010

Read more

பதியின் கல்விச் சேவையை நான் விஞ்ச ஆசை - …

பதியின் கல்விச் சேவையை நான் விஞ்ச ஆசை - மாத்தளையில் பிரதியமைச்சர் பைசர் தெரிவிப்பு.

   பதியுத்தீன் மஹ்மூத் கல்விக்குச் செய்த சேவையைவிட இதுவரையில் வேறு எவரும் செய்யவில்லை. ...

23 May 2010

Read more

முஸ்லிம் குழுவினரால் பாண்டிருப்பு இந்து …

முஸ்லிம் குழுவினரால் பாண்டிருப்பு இந்து மகா வித்தியாலயம் தாக்குதல்.- மசூர் மௌலான நகர பிதா!

கடந்த 2010 .05 .18 அன்று நள்ளிரவில் கல்முனை-பாண்டிருப்பு இந்து மகா வித்தியாலய நுழைவாயில் அடித்துத...

22 May 2010

Read more

வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் கோரும் பா…

வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் கோரும் பாதாள உலகத்தினர்.

கொலை மற்றும் கப்பம் கோரல் போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் தேடப்பட்டுவரும் பாதாள உலகக் கோஷ்...

21 May 2010

Read more

மீண்டும் சூடு பிடிக்கும் சனல் 4 விவகாரம்…

மீண்டும் சூடு பிடிக்கும் சனல் 4 விவகாரம்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது இலங்கைப் படையினரால் பிடிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்...

19 May 2010

Read more

ஸ்ரீ லங்காவைத் தாக்க முயலும் 'லைலா'

ஸ்ரீ லங்காவின் தென் பகுதி, மேல் மாகாணம் உட்பட சப்ரகமுவ, மத்திய மாகாணங்களையும் 'லைலா' தாக்...

19 May 2010

Read more

அக்குறனைப் பி.ச. தவிசாளருக்கு கொலை அச்சு…

அக்குறனைப் பி.ச. தவிசாளருக்கு கொலை அச்சுறுத்தல்.

நேற்று அக்குறனைப் பிரதேச சபையின் தவிசாளர் சிம்சானுக்கு  கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட...

19 May 2010

Read more

அக்குரனையில் சட்டரீதியற்ற கட்டடங்கள் அகற…

அக்குறனைப் பிரதேச சபை எல்லைக்குள்ளான  சட்டரீதியற்ற கட்டடங்களை அகற்றும் பணியின் முதற்கட்ட நடவ...

18 May 2010

Read more

அமைச்சர் கெஹெலியவுக்கு ஜமியத்துல் உலமா வ…

அமைச்சர் கெஹெலியவுக்கு ஜமியத்துல் உலமா வரவேற்பு.

நேற்று முன்தினம் மாலை கண்டி சிட்டி ஜம்மியத்துல் உலமாவின் கரும பீடத்துக்கு விஜயம் செய்த ஊடகத்துறை...

18 May 2010

Read more

ஈரானில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு செங்கம்பள வ…

ஈரானில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு செங்கம்பள வரவேற்பு.

G 15 நாடுகளின் உச்சிமாநாடு நாளை ஈரானின் தலைநகரமான தெஹ்ரானில் கூடவுள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொள்...

16 May 2010

Read more

ஸ்ரீ லங்கா சுங்கப் பிரிவினரால் பாகிஸ்தான…

ஸ்ரீ லங்கா சுங்கப்பிரிவினர் பாகிஸ்தான் பிரஜை ஒருவரைக் கைது செய்துள்ளனர். கட்டுநாயக்கா விமான நிலைய...

15 May 2010

Read more

தாதிகள்-ஆசிரியைகள் பாலியல் துஷ்பிரயோகம்.…

கண்டி, மாத்தறை, குருவிட்ட, நீர்கொழும்பு, குளியாப்பிட்டிய, கல்கிஸ்ஸை, பேலியகொடை, நிட்டம்புவ, செட்ட...

15 May 2010

Read more

ஹஜ்ஜுக்கான கேள்வி 8000 பேர்; நிரம்பல் 28…

ஹஜ்ஜுக்கான கேள்வி 8000 பேர்; நிரம்பல் 2800 பேர்.

இவ்வருட ஹஜ் கடமையை நிறைவேற்ற ஸ்ரீ லங்காவின் 2800 பேருக்கான கோட்டாவை வழங்குவதாக சவூதி அரேபிய ஹஜ்ஜு...

15 May 2010

Read more

கொழும்பில் முஸ்லிம்கள் எதிர்ப்பு ஆர்ப்பா…

கொழும்பில் முஸ்லிம்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

இன்று நண்பகல் 'கொழும்பு குடியிருப்பாளர் பாதுகாப்பு மன்ற'த்தினர் கொழும்பு-கம்பனித்தெருவில்...

14 May 2010

Read more

ஐ.தே.க. பிரச்சினை ஒரு நோக்கு!

ஐ.தே.க. தொடர்ச்சியான தோல்விகளைக் கண்டுவருவதனையிட்டு கட்சியின் உயர் மட்ட அங்கத்தவர்கள் தலைவர் ரணில...

13 May 2010

Read more

மத்திய மாகாண சபைக்குஆளும் தரப்பில் புதிய…

நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய...

10 May 2010

Read more

சட்ட விரோத கட்டடங்களை அகற்றும் பணி கொம்ப…

சட்ட விரோத கட்டடங்களை அகற்றும் பணி கொம்பனித் தெருவிலிருந்து ஆரம்பம்.

கொழும்பு, கொம்பனித் தெரு, மலே வீதிப் பிரதேசத்தில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்டிருந்த சுமார் 3...

08 May 2010

Read more

ஆங்கில ஆசிரிய நியமனங்களுக்கான விண்ணப்பங்…

அமைச்சர் பந்துல குணவர்த்தன. ஆங்கில மொழி மூல உயர்தர கற்கைக்கென 554 ஆசிரிய நியமனங்கள் வழங்கப்ப...

08 May 2010

Read more

தொலைபேசி அழைப்பின் மூலம் விசித்திரமான மு…

கையடக்கத் தொலைபேசி அழைப்பின் மூலம் விசித்திரமான முறையில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக SMS தகவல்கள் ...

08 May 2010

Read more

பிரதியமைச்சர் பைசர் அபிவிருத்திப் பணிகளை…

சுற்றாடல் துறைப் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தனது அமைச்சின் அபிவிருத்திப் பணிகளை தனது ஹரிஸ்பத்துவ...

07 May 2010

Read more

சுற்றாடல் துறை பிரதியமைச்சர் இன்று அமைச்…

சுற்றாடல் துறை பிரதியமைச்சர் இன்று அமைச்சுப் பொறுப்பை ஏற்றார்.

கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சுற்றாடல் துறைப் பிரதி அமைச்சருமான பைசர் முஸ்தபா இன்று ...

07 May 2010

Read more

பிக்குவின் காமப் பசிக்கு இரையாகிய மாணவிக…

காமத்தில் நிர்வானத்துவத்தை விளங்கிக்கொள்ள முடியாமல் போன அரைப்பிக்கு ஒருவரின் காமப் பசிக்கு இரு மா...

07 May 2010

Read more

இரகசிய நடவடிக்கைக்காக பாதுகாப்பு உயர் அத…

இரகசிய நடவடிக்கைக்காக பாதுகாப்பு உயர் அதிகாரி அனுப்பிய குழு இத்தாலியில் கைது.

அகதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் இத்தாலியப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட 9 பேர் கொண்ட தமிழ் குழு;&...

07 May 2010

Read more

உள்நாட்டு வர்த்தக அமைச்சர் நாட்டு மக்களு…

இன்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு  விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு  மற்...

06 May 2010

Read more

காதர் ஹாஜியாரும் கலங்கிப் போயுள்ள ஐ.தே.க…

ஐ.தே.மு.வின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான காதர் ஹாஜியாரின்  பொதுத் தேர்தலின் பின்னாலான அரசியல...

06 May 2010

Read more

சுற்றாடற்றுரை பிரதியமைச்சர் நாளை பொறுப்ப…

நேற்று முன்தினம் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர...

06 May 2010

Read more

புதிய அமைச்சர்களும், பிரதியமைச்சர்களும்.

இன்று அலறி மாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர்கள்:- கெஹெலிய ரம்புக...

05 May 2010

Read more

அவசரகாலச் சட்டத்தில் தளர்த்தப்பட்டுள்ள வ…

அவசரகாலச் சட்டத்தை இன்னும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பது சம்பந்தமான பிரேரணை இன்றைய நாடாளுமன்ற அமர்வி...

04 May 2010

Read more

அவசரகாலச் சட்டத்தை விமர்சித்த நாமல் ராஜப…

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, 24 வயதையுடைய  ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

04 May 2010

Read more

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு முகம் கொடுக்க…

மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம் பெயர் தமிழ்ப் புலிகளால் அந்நாட்டு அரசாங்கங்களினது ஒத்...

04 May 2010

Read more

G 15 மாநாட்டுக்கு ஜனாதிபதி விஜயம்.

எதிர்வரும் 17 ஆம் திகதி ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் நடைபெறவிருக்கும் G 15 அமைப்பு நாடுகளின் மாநாட்டி...

04 May 2010

Read more

தலைவர்-நிமல். கொரடா-தினேஷ்.

7 ஆவது நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சி குழுத் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும், ஆளும் கட்சி...

02 May 2010

Read more

இராணுவ நீதிமன்ற விசாரணைகளைப் புறக்கணிக்க…

இராணுவ நீதிமன்றத்தினால் எதிர் வரும் 4 , 5 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ள வழக்குகளைப் புற...

02 May 2010

Read more

இலங்கையை ஆசியாவின் ஆச்சர்யமாக மாற்ற உறுத…

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மேதினச் செய்தியில், தேசிய அபிவிருதியினூடாக இந்த நாட்டை ஆசியாவி...

01 May 2010

Read more

நுவரெலியா மாவட்ட பொதுத் தேர்தல் வாக்குகள…

நுவரெலியா மாவட்டத்தின் பொதுத் தேர்தல் வாக்குகள் மீண்டும் என்னப்பட வேண்டும் என்று கோரி ஐ.தே.முன்னணியி...

01 May 2010

Read more

நாடோடி மன்னனின் கபட நாடகம்.

அது தங்க நகைகளுக்குப் புகழ் பெற்ற புறக்கோட்டைத் தெருவொன்றின் பெயர் கொண்டவரது வெள்ளவத்தைத் தொடர்மாடி ...

25 Apr 2010

Read more

கண்டி மாவட்ட புதிய அமைச்சர்கள்.

மஹிந்தானந்த அலுத்கமகே, கெஹெலிய ரம்புக்வெல்ல, சரத் அமுனுகம, பைசர் முஸ்தபா போன்ற முன்னாள் அமைச்சர்களுக...

23 Apr 2010

Read more

புதிய அமைச்சரவையின் விபரம்

இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட அமைச...

23 Apr 2010

Read more

நாவலப்பிட்டியில் பைசருக்கு வழங்கப்பட்ட ச…

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மீள்தேர்தளுக்காக நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதிக்குச் சென்ற போது, தொகு...

21 Apr 2010

Read more

7 வது நாடாளுமன்றப் பிரதமர் D M ஜயரத்ன

கண்டி மாவட்டத்தின் தேசியப்பட்டியல் உறுப்பினரும், பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளரும், ஸ்ரீ.ல.சு.கட்...

21 Apr 2010

Read more

தேசியப்பட்டியல் உறுப்பினர்கள்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 17 கீதாஞ்சன குணவர்த்தன, எல்லாவல மேதானந்த தேரர் , முத்து சிவலிகம்,...

21 Apr 2010

Read more

வரலாற்று வெற்றியைக் காப்பாற்றித் தந்துள்…

1950 களில் C S மரிக்கார் கண்டியிலிருந்து நாடாளுமன்றம் சென்றதற்குப் பின் இதுவரை, எந்த ஒரு முஸ்லிம் பி...

20 Apr 2010

Read more